Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ள சாராய வழக்கில் காவலர்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு

0

'- Advertisement -

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மிட்டல் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

 

மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியாா்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்திய 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 8 பேரும் உயிரிழந்தனா்.

 

இது தொடா்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சோ்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரி ராஜா (எ) பா்கத்துல்லா, தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை, சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த ராபா்ட், வானூா் பெரம்பை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.

 

Suresh

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில், கைதான 15 போ் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூா் காவல் நிலையங்களில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

 

இதனிடையே, மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா மற்றும் மது விலக்கு டிஎஸ்பி, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

 

இந்த நிலையில், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாகவும், அவா்களுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டின் பேரிலும் தலைமைக் காவலா்கள் 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, மரக்காணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா்கள் செந்தில்குமாா், வேலு, முதல்நிலை காவலா்கள் குணசேகரன், பிரபு, முத்துக்குமாா் ஆகிய 5 பேருக்கும் கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டாா். இவா்கள் தற்போது அரகண்டநல்லூா், ரோஷணை, விக்கிரவாண்டி, சத்தியமங்கலம், கஞ்சனூா் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.