தமிழக அரசு போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் முழுவிபரங்கள்
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 3274 டிரைவர் – கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.arasubus.tn.gov.in என்ற மூலம் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: ஓட்டுநர் உடன் நடத்துநர்
பணிக்காலியிட எண்ணிக்கை: 3274
1.மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை – 364
2.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) வரையறுக்கப்பட்டது சென்னை – 318
3.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட் – 322
விழுப்புரம் – 88
வேலூர் – 50
காஞ்சிபுரம் – 106
கடலூர் – 41
திருவண்ணாமலை- 37
4.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் – 758
கும்பகோணம் -101
நாகப்பட்டிணம் – 136
திருச்சி – 176
காரைக்குடி – 185
புதுக்கோட்டை – 110
கரூர் – 48
5.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட் – 486
சேலம்-382
தர்மபுரி- 104
6.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் – 344
கோவை-100
ஈரோடு – 119
ஊட்டி – 67
திருப்பூர் – 58
7.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் – 322
மதுரை – 190
திண்டுக்கல்- 60
விருதுநகர் – 72
8.தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்
திருநெல்வேலி – 139
நாகர்கோவில்- 129
தூத்துக்குடி – 94
உயது வரம்பு: 01.07.2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது 01.07.2025 அன்று : பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST)45வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.
முக்கிய தகுதிகள்: செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
உயரம் மற்றும் எடை: உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம்.
உடல் தகுதி:
1. தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண் பார்வை பெற்றிருத்தல் வேண்டும்.
2. எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்..
சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.
மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC / ST) பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/-(18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து, தேர்வு செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.
இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை/ நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.
இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது, தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு.
தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.