திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு
திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி
அஇஅதிமுக தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பங்கேற்பு.
எஸ்.டி.பி.ஐ. கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி 37 -வது வார்டு தலைவர் கேபிள் சித்திக் தலைமையில் நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி மற்றும் 37,38 வது வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
38 வது வார்டு தலைவர் இமாம்.நூரி வரவேற்புரை ஆற்றினார்.
திருவெறும்பூர் தொகுதி தலைவர் இன்ஜினியர் ஷேக் முகம்மது வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ். டி. பி. ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கலந்துக் வாழ்த்துரை வழங்கினார்.

இஃப்தார் நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சி திருச்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இன்ஜினியர் முகமது சித்திக்,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முபாரக் அலி,
மாவட்ட செயலாளர்கள் மதர். ஜமால் முகமது,இன்ஜினியர்.சதாம் உசேன்
மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி
மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு) ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்.மஜீத்,கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா ,
சுற்றுச் சூழல் அணி தலைவர் எஸ்.எஸ். ரஹ்மத்துல்லா,வர்த்தகர் அணி திருவெறும்பூர் பகுதி தலைவர் கே.எம்.எஸ். சாதிக்,உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள், ஜமாத்தார்கள்,அதிமுக பகுதி,தொகுதி,வட்ட நிர்வாகிகள், வியாபார சங்க நிர்வாகிகள், பொதுமக்கள்ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வை திருவெறும்பூர் தொகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி தொகுத்து வழங்கினார்.
இறுதியாக 37 வது வார்டு கிளை பொருளாளர் உமர் முக்தார் நன்றி கூறினார்.