Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியை சென்னை போன்று மாற்றாமல் விடமாட்டார் அமைச்சர் கே.என். நேரு. பஞ்சபூரில் அடுத்து வரும் பிரம்மாண்டம்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூருக்கு வருது மிகப்பெரிய புட்பார்க்.

இதற்கான அனுமதி பெற்று விரைவில் அங்கு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட இருக்காம். அப்புறம் என்ன திருச்சி மாவட்ட மக்களே இனி மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான் போங்க.

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக திருச்சி மாவட்டத்தையே மாற்றும் அளவுக்கு பஞ்சப்பூர் பகுதியில் மிகுந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்போது பஞ்சப்பூர் தமிழகம் முழுவதும் பிரபலம் பெற்ற பகுதியாக தற்போது மாற்றம் அடைந்து வருகிறது.

ஏற்கனவே பஞ்சப்பூர் பகுதியில் கனரக வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டத்தின் மத்திய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் திறப்பு விழா திருச்சிக்கே திருவிழா போல் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. பஞ்சப்பூர் பக்கம் அதிர்ஷ்ட தேவதை மையம் கொண்டு விட்டாரோ என்றுதான் கூற தோன்றுகிறது. அடுத்ததாக பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது .

Suresh

ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டும் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி திருச்சி என்றால் நீங்கள் பஞ்சப்பூரா என்று கேட்கும் அளவிற்கு வெளி மாவட்ட மக்கள் மத்தியில் பஞ்சப்பூர் பெவிக்கால் போட்டு ஒட்ட வைத்தது போல் ஒட்டிக் கொண்டுள்ளது. மினி திருச்சியாக மாறி வருகிறது பஞ்சப்பூர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் பஞ்சப்பூரில் அமைக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.( ஒரு சில வியாபார சங்க நிர்வாகிகள் தவிர ) பஞ்சப்பூரானது திருச்சி மாவட்டத்திற்கு ஒரு முக்கிய பகுதியாக அமைய இருக்கிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது பஞ்சப்பூரில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் புட்பார்க் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த உணவுப்பூங்காவானது 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், பன்சோன், 5 டி தியேட்டர் போன்றவையும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உணவுப்பூங்காவானது பஞ்சப்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அனுமதி பெற்று அங்கு கட்அவுட்டானது வைக்கப்பட்டுள்ளது. திருச்சியின் முக்கிய பகுதியில் இது அமைய இருப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்க இருக்கிறது.

சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் மாவட்டமாக திருச்சி மாறி வருகிறது. இதில் பஞ்சப்பூருக்கு வரும் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் இனி சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் இந்த உணவுப்பூங்காவையும் திறந்து திருச்சி மாவட்டத்தை சென்னைக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய மாவட்டமாக மாற்றுவதில் திருச்சி அமைச்சர் கே என் நேரு உறுதியாக உள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.