பாரதப் பிரதமர் மோடி , அண்ணாமலை, தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் , துணை மேயர் திவ்யா , மண்டல் தலைவர் மதிவாணன் . வேடிக்கை பார்த்த போலீசார் .
திருச்சியில்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருச்சி மாநகர செயலாளரும் திருச்சி மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திருச்சி மத்திய மாவட்ட திமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் வைரமணி , துணைச் செயலாளர் முத்து செல்வம் , கவுன்சிலர் கலைச்செல்வி , ஒன்றிய செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட பலர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகே தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று தமிழ்நாட்டு மக்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிராதனை கண்டித்து திருச்சியில் தெற்கு மாவட்ட திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாநகரக் செயலாளரும் திருவெறும்பூர் மண்டல் தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெயா நிர்மலா , செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்
கே என் சேகரன் பகுதி செயலாளர்கள் மோகன் , நீலமேகம், தர்மராஜ், பாபு விஜயகுமார், ராஜ்முகம்மது, சிவக்குமார் மணிவேல் மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகி அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. அந்த நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டால் தேசிய கல்விக் கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறார்கள்.

இதனை கண்டித்து கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், மாணவ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடிய பொழுது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்களை நாகரீகமற்றவர்கள் எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சரை கேலியாகவும் விமர்சனம் செய்து பேசினார்.
இது நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்நாடு எம்பிக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு மக்களும் தர்மேந்திர பிரதானம் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மக்கள் குறித்து இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசையும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவ படங்களையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையையும் எரித்து அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தர்மேந்திர பிரதானி புகைப்படத்தையும் கிழித்து எரிந்தனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இரண்டு இடங்களிலும் இந்த உருவப் பொம்மை எரிப்பு நிகழ்ச்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு இருந்தும் அவர்கள் புகைப்படங்கள் மற்றும் உருவ பொம்மை எரியும் வரை பாதுகாப்பாக நின்று வேடிக்கை பார்த்தனர் . பொது இடங்களில் உருவ பொம்மை எரிப்பு போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்காதபோது திமுகவினர் நடத்திய பாரதிய பிரதமரை உருவப்படம் எரிப்பு ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் இடையே முகம் சுளிக்க வைத்தது .
இது குறித்து திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறும்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சியில் எந்த வார்டிலும் சுகாதாரம் இல்லை , சாலைகள் குண்டு குளியுமாக உள்ளது இது குறித்து பலமுறை மேயர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை எனக் கூறி சங்கு ஊதும் போராட்டம் அறிவித்து சென்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாநகராட்சி வாயிலில் நின்று சங்கை எடுக்க கூட அனுமதிக்கவில்லை , சாதாரண மாநகர மேயரை கண்டித்து சங்கு ஊத கூட அனுமதிக்காத போலீசார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரததான் தான் கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டும் ஏப்படி பாரத பிரதமரின் உருவப்படத்தை எரிக்க அனுமதி அளித்தனர் என தெரியவில்லை எனக் கூறினார்.