Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழாவில் 35 பேருக்கு சாதனை பெண்கள் விருது

0

'- Advertisement -

 

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 35 மகளிர்களுக்கு சாதனை பெண்கள் விருது வழங்கப்பட்டது .

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூக பணித்துறை இணைந்து பல்வேறு துறையில் சாதித்த மகளிர்களுக்கு இன்று மாலை திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனைப் பெண்கள் விருது ஆண்டுதோறும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக பல்வேறு துறையில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

Suresh

இந்த வருடம் இதற்கான விழா ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரதீபா தலைமையில் திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது .

 

சிறப்பு விருந்தினர்களாக ரோட்டேரியன் டாக்டர் ஜமீர் பாட்ஷா, சகிலா ஜமீர் பாட்ஷா, ரோட்டரி மாவட்டம் 3000 மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

8

ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி , ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுதா பிரபு , ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை தலைவி அனிதா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டாக்டர் உமா வைத்தியநாதன், அருட் சகோதரி ஜோசப்பின் சின்னராணி, சாக்சீடு இயக்குனர் பரிமளா சேவியர், தில்லைநகர் குற்ற பிரிவ இன்ஸ்பெக்டர் அஜீம், காவல்துறை கன்டோன்மென்ட் உதவி ஆணையர் யாஸ்மின், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமுதா, தொழில் முனைவர் சங்கீதா, வழக்கறிஞர் ஹனிஃபா பீ உள்ளிட்ட 35 மகளிர்களுக்கு சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.