திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டிகளை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர் குமார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில்..
பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சியில் உள்ள V இடையபட்டி, மினிக்யூர், பிராம்பட்டி, வருத்தாழ்வார்பட்டி, தாதலூர் பூத்களில்
மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செ.செம்மலை

மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆகியோர்.. பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து பூத் (கிளை) பொறுப்பாளர்களை நியமித்தனர்.
இந்த நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகர், உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் C.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் அணிச் செயலாளர்கள்
மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் உடன்
இருந்தனர்.