ஸ்ரீரங்கத்தில் டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது .

திருவரங்கம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 25. ) இவர் திருவரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவரங்கம் ஜான்சி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவர் குடிபோதையில் டீ கடைக்கு வந்து பெரியசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, தடியால் தாக்கி மிரட்டி சென்று உள்ளார்.
இதுதொடர்பாக பெரியசாமி திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.