திருச்சி தில்லை நகரில் அப்பள கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது ..
திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சதீஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ 30 ஆயிரம்
பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சதீஷ் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்கிடமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தென்னூர் பகுதியை சேர்ந்த கரிகாலன் (வயது 40 ) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சதீஷ் வேலை செய்யும் அப்பள கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 30 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கரிகாலனை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர் .