திருச்சி:சினிமா நடிகர்கள் கட்சியை தொடங்கியவுடன் முதல்வராக பாவித்து கொள்கிறார்கள். பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை
முதல்வர் அமல்படுத்த விட மாட்டார்:
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்
திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
அமல்படுத்த விடமாட்டார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு கூறினார்.
திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகரம், பொன்னகர் பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் பொன் நகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
வட்ட செயலாளர் தனசேகர் வரவேற்றார்,
கவுன்சிலர்கள் புஷ்பராஜ், மஞ்சுளா தேவி பாலசுப்பிரமணியன்,வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,தொ.மு.ச குணசேகரன்,நிர்வாகிகள் பவுன்ராஜ் மோகன், போஸ், கவிதா மாணிக்கம், முரளிதரன், ஸ்டார் சர்ச்சில், மணிமாறன், திருப்பதி ,சதீஷ்குமார், சுகுமாரன், அந்தோணிசாமி, கவிதா, ஷீலா, தில்லை மெடிக்கல் மனோகர், மன்னன் இளங்கோ, பிராட்டியூர் மணிவேல் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ,மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன்,கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி, தலைமைக் கழக பேச்சாளர் தர்மபுரி அதியமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-
கடந்த 1969 -ம் ஆண்டு மார்ச் 6 – ந் தேதி (இதே நாளில்) தான் தமிழ்நாடு முதல்வராக அண்ணா பொறுப்பேற்று சிறப்பாக செல்பட்டார். தற்போதைய தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா, கலைஞரைப் போலவே சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். இந்த ஆட்சியில் தினந்தோறும் பல திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காமல் நெருக்கடி கொடுத்து வந்தாலும், நெருக்கடியை சமாளித்து அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அண்மையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டம் நடத்தியதற்காக திமுக வைச் சேர்ந்தவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராமல் போனதற்கு காரணம் அவர் பா.ஜ.க .வுக்கு ஆதரவு எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களும் தற்போது கட்சி தொடங்கி தங்களை முதல்வராக பாவித்துக் கொள்கின்றனர். அவர்கள் யாரும் மக்களுக்காக சேவை செய்தவர்கள் கிடையாது. மத்திய அரசு திணிக்கும் மும்மொழிக் கொள்கையை, முதல்வராக இருக்கும் வரை தமிழகத்தில் அமல்படுத்த விட மாட்டேன் என்ற உறுதியுடன் இருப்பவர் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் 2026 ஆவது ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
கூட்டத்தில்
முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,முன்னாள் மத்திய மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், நாகராஜ், கமால் முஸ்தபா,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், செவந்தி லிங்கம்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,
வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,
,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டச் செயலாளர்கள் மூவேந்திரன்,
ராமதாஸ், பி.ஆர்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோர் நன்றி கூறினர்.