சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வரவேற்பு.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஹஜ் இல்லம், முதலமைச்சர் அறிவிப்புக்கு இடிமுரசு இஸ்மாயில் வரவேற்பு.
தமிழகத்தில் வாழ்கின்ற ஒரு கோடி முஸ்லிம்களில் இறுதிக் கடமையான புனித பயணம் ஆகிய மக்கா மதினாவுக்கு ஹஜ் செல்லக்கூடியவர்கள் சென்னைக்கு வந்து விமானங்களில் பயணம் செய்திட ஏதுவாக சென்னை விமான நிலையத்தின் அருகிலே உள்ள நங்கநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணிகள் தங்கி செல்லும் வகையில் 65 கோடி செலவில் புதியதாக ஹஜ் இல்லம் கட்டப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்கள், அதனை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் நெஞ்சார வரவேற்கிறது, பாராட்டுகிறது.
சென்னை வேப்பேரியில் ஆணைக்காரர் அப்துல் சுக்கூர் அவர்களால் கட்டப்பட்டு ஹஜ் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் விமான நிலையத்திற்கும் வேப்பேரிக்கும் சிறிது தூரம் அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய மக்களின் இறுதி கடமையாம் ஹஜ் கடமையை சிரமமின்றி நிறைவேற்றுகின்ற வகையில் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்ற அறிவிப்பு தமிழக இஸ்லாமிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு போற்ற தக்கதாகும் தமிழக இஸ்லாமிய மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் .