சதுரங்க வேட்டை போன்று எத்தனை படம் வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட 2 நபர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த போது கைது.
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை ஏமாற்றி சிக்கிய கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களும், பரிசுகளும் அறிவித்ததும் அதன் மூலம் ரூ.50 கோடி வரை மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் அவர்கள் கோவையில் நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்தபோது சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சதுரங்க வேட்டை படம் பாணியில் யார் கடை விரித்தாலும் ஏமாறுகிறார்கள் மக்கள்.. சேலத்தில் அண்மையில் பல லட்சம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறியதை நம்பி அள்ளித்தந்து ஏமாந்தனர்.. எந்த நிதி முதலீட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, ஓராண்டில் ஒரு பணத்தை டபுள் ஆக தரவே முடியாது, அதேபோல் 10 சதவீதம், 20 சதவீத வட்டி எல்லாம் தரவே முடியாது..
ஆனால் அப்படி சொல்லி ஏமாற்றுபவர்கள் ஒவ்வொரு முறையும் நூதனமான முறையில் ஏமாற்றி வருகிறார்கள்.. மக்களை ஏமாற்ற ஒரு பார்முலாவை வேறு வேறு பாணியில் கையில் எடுக்கிறார்கள். அப்படித்தான் கிரிப்டோ கரன்சி மோசடி அரங்கேறி வருகிறது. இதில் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களே ஏமாந்துள்ளார்கள் என்பது தான் ஹைலைட்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ஒரு கும்பல் இந்தியா முழுவதும் ஏமாற்றி உள்ளது. அதுவும் தமிழ்நாட்டின் கோவையில் கடையை விரித்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் எப்படி சிக்கினார்கள்.. என்பதை பார்ப்போம்.. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி அசோகனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதை நம்பி போனில் அழைத்து பேசிய போது, கவர்ச்சிகரமாக பேசியுள்ளனர்.
அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அசோகன் கிரிப்டோ கரன்சியில் ரூ.98 லட்சம் மோசடி செய்துள்ளார். பின்னர் தான் தான் ஏமாற்றப்பட்டதை அசோகன் உணர்ந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின் (வயது 36), அரவிந்த்குமார் (வயது 40) ஆகியோரை புதுச்சேரி கிரைம் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு ‘ஹாஷ்பே’ என்ற நிறுவனத்தை தொடங்கி நித்தீஷ் ஜெயின், அரவிந்த்குமார் இந்த மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இருவரையும் கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்திருக்கிறார்களாம். அப்போது அவர்கள் அழகிகளுடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசாரணையில், கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களையும், பரிசுகளையும் அறிவித்தது தெரியவந்துள்ளது.
ரூ.1 கோடி முதலீடு செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சொகுசு கார்களும், புதிய வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு கூடுதல் போனஸ் என்றும் சலுகைகள் வழங்கியதும், இதை பிரம்மாண்ட விழா நடத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களின் மோசடி பற்றி தெரியாமல், சொகுசு கார் பரிசு, பிரம்மாண்ட விழாக்களை நம்பி தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ரூ.50 கோடிக்கு மேல் ஹாஸ்பே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்களாம். ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியதால் ஹாஷ்பே நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்திருக்கிறது. இதனால் அவர்களால் முதலீட்டாளர்களுக்கு சொன்னபடி பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர். எனினும் ஹாஷ்பே நிறுவனத்தில் சேர்த்த பணத்தை வைத்துக்கொண்டு மோசடி கும்பல் நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார்களாம்.
கோவை நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த போதுதான் பாண்டிச்சேரி சைபர் கிரைம் போலீசில் இருவரும் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.