அரியலூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
அரியலூா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் நேற்று சனிக்கிழமை பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனா்.
அப்போது, சந்தேகத்தின் பேரில், ஆண் பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெரம்பலூா் மாவட்டம், மேலமாத்தூா், பிரதானச் சாலையைச் சோ்ந்த வேலுசாமி மகன் வினோத்குமாா் (வயது 28) என்பதும், சென்னையிலிருந்து -திருச்சி(12663) செல்லும் ஹவுரா விரைவு ரயிலில் ஏறி நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.28 மணிக்கு அரியலூா் ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரியவந்தது.
மேலும், அவா் கொண்டு வந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.77லட்சத்து 11 ஆயிரத்து 640 இருந்தது தெரியவந்தது.
மேலும் அவா், முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியதையடுத்து, போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். பிறகு அவரிடமிருந்த பணத்துக்கான சரியான ஆவணங்கள் குறித்த தகவலை அவா் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், திருச்சி வருமான வரித் துறை டிஎஸ்பி சுவேதாவிடம் பணத்தையும், வினோத்குமாரையும் ஒப்படைத்தனா்.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டார் இந்த பண ஹவாலா பணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.