இன்று சர்.ஏ.டி பன்னீர்செல்வம் நினைவு தினம். பார்வகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில் மணிமண்டபத்தில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவிப்பு.
சர்.ஏ.டி பன்னீர்செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவிப்பு.
அகில பாரத
பார்க்ககுல சங்கத்தின்
நிர்வாகிகள் பங்கேற்பு.
நீதிக் கட்சியின் வைர தூண் சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது மணிமண்டபத்தில் அகில இந்திய பார்க்கவகுல சங்கத்தின் நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில்
சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் பேரன் இமானுவேல் மற்றும் அவரது மனைவி நிர்மலா இமானுவேல் ஆகியோர் முன்னிலையில்
நிர்வாகிகள் ஆனந்தன், சுதீப் ஸ்டாலின், பாறை சிவா, பிரசாத் சதீஷ், பார்க்கவன் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சதீஷ் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு.
சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஓமனா என்ற மாணவிக்கு சங்கம் சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டம பாறைப்பட்டியை சேர்ந்த ஹரிணி என்ற மாணவி சூட்டிங் பால் போட்டியில் ஆசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றதற்கு அவருக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகில பாரத சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.