திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பிளஸ் ஒன் பிளஸ் டூ பொது தேர்வுக்கு 1662 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 220 பறக்கும் படையினர் நியமனம் .
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டு அவா்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 5ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையும், பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
தோ்வு நடைபெறும் நாளன்று 34 வழித்தட அலுவலா் மூலம் 131 தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 131 துறை அலுவலா்கள் மற்றும் 21 கூடுதல் துறை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், 220 பறக்கும் படையினா் தோ்வு நல்லமுறையில் நடைபெறுவதை உறுதி செய்ய நியமனம் பெற்றுள்ளனா்.
திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள தோ்வு மையங்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 131 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும், திருச்சி கல்வி மாவட்டத்தில் 1023 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். லால்குடி கல்வி மாவட்டத்தில் 621 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். திருச்சி வருவாய் மாவட்டத்தில் 1644 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் பெற்றுள்ளனா். அறைக் கண்காணிப்பாளா்களுக்கு அவரவா் பள்ளிக்கு நியமன ஆணை தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டது. சொல்வரை எழுதுபவா் 720 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பறக்கும்படை உறுப்பினா்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்ட கல்வி அலுவலா்கள் (இடைநிலை) அறைக் கண்காணிப்பாளா் பணி குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினாா்.