தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க ஒன்றிணைந்த திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு .
திருச்சி ஒன்றிணைந்த அஇஅதிமுக ( திருச்சி புறநகர் தெற்கு , வடக்கு, மாநகர் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகரும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் “M.K.T” என அன்புடன் அழைக்கப்படுபவருமான எழில் இசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் 116-ஆவது பிறந்த நாளான (1.3.2024, சனிக்கிழமை) அன்று காலை 10:35 மணி அளவில் திருச்சியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருச் சிலைக்கு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர்,மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .