நாளை அம்மா பேரவை சார்பில் நடைபெற உள்ள அதிமுக ஆட்சி சாதனை விளக்க நோட்டீஸ் விநியோக நிகழ்ச்சி. அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
கழக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட , செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அறிவுறுத்தலின்படி

அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில். அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுர விநியோக நிகழ்ச்சி ( திண்ணை பிரச்சாரம் ) நாளை 28.02.2025 வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி அளவில் காந்தி மார்க்கெட் கமான் வளைவு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர்,ஜெ.சீனிவாசன் தலைமையில்
சிறப்பு அழைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர்
டி.ரத்தினவேல் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை
திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர், முன்னாள்
ஆவின் தலைவருமான
சி.கார்த்திகேயன் சிறப்பாக செய்து உள்ளார் .
அதுசமயம் சிறப்பாக நடைபெற உள்ள நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .