விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி மார்க்கெட் தரைக் கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் .
திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில வியாபார சங்கங்கள் இடையே உள்ள முரண்பாட்டை எடுத்துக் காட்டியது இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி மார்க்கெட் தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க நிர்வாகிகள் சார்பில் தலைவர் கருப்பையா, செயலாளர் எம்.கே.எம் காதர் மைதீன், பொருளாளர் அப்துல் ஹக்கீம் மற்றும் சங்க ஆலோசகர்கள் , துணைத் தலைவர்கள், துணை செயலாளர், கமிட்டி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
முக்கிய அறிவிப்பு:
நமது காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும், நல்லெண்ணம் கொண்ட எந்த ஒரு வியாபாரியும், கள்ளிக்குடி சுற்றி உள்ள விற்பனையாகாத நில உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றம் செய்து தருகிறோம் என்ற ஈனத்தனமான, துரோகச் செயலையும், வாக்குறுதியையும் செய்யவில்லை என்றும், உழைப்பால் வரும் வருமானமே என்றும் நீடிக்கும் என்றும் தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறியுள்ளனர்.
மேலும் (விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும்)
காத்திருப்போம்
என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.