Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்.

0

'- Advertisement -

குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் நேற்று சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட்டியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் அருண்.(வயது 21). இவா், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக அருண் கல்லூரிக்குச் செல்லாமல் மனமுடைந்தநிலையில் வீட்டில் இருந்துள்ளாா். இதுதொடா்பாக அவரது பெற்றோா் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு வந்த அருண் வீட்டிலிருந்து நள்ளிரவில் திடீரென மாயமாகியுள்ளாா்.

Suresh

இதையடுத்து  நேற்று சனிக்கிழமை காலை அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் அருணைதேடியபோது, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அருண் காலணி மிதந்துள்ளது.

இதையடுத்து குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, தொட்டியம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இறங்கி தேடியபோது, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருண் சடலத்தை மீட்டனா்.

பின்னா் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, அருண் தற்கொலை செய்யும் நோக்கில் காலில் கயிற்றை கட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறேதும் காரணமா என விசாரித்து வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.