ஸ்ரீரங்கத்தில்
கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது .
திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.
பிறகு அவரிடம் இருந்து ரூ. 700 பணத்தை
பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இது தொடர்பாக காளிமுத்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவரங்கம் கீழ வீதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), திருவானைக்கா காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்த முத்தையன் (வயது 38) ஆகிய இரண்டு பேரை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து உள்ளனர்.