திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினக் கொண்டாட்டம்
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்றய தினம் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி அளவில் நடைபெறுகின்ற தமிழ்க் கூடல் என்னும் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சியோடு ஆண்டு விழாவையும் சேர்த்து மாணவ மாணவிகள் கொண்டாடினர்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு
பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டே தமிழ் என்னும் எழுத்துகளால் ஆன சொல் வடிவத்தை உருவாக்கிக் காட்டினர்.
முன்னதாக ஆண்டு விழா மற்றும் தமிழ்த் கூடல் நிகழ்ச்சியை நடத்த, தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளிவளாகத்தில் ஒன்று கூடிய பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய தலைமை ஆசிரியர் சற்குணன், சர்வதேச தாய்மொழி தினத்தில், சர்வதேச மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்கக்கூடிய தமிழையும் அதன் பெருமையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மேலும் அவர் கூறுகையில், உலகிலேயே சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் ஒரே தகுதி வாய்ந்த இனம் தமிழினம் தான் என்றும் கூறினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மல்லிகா பேசும்போது:- பெற்றோர்களாக பள்ளிக்கு வந்து தமிழ் உணர்வாளர்களாக திரும்புவதாக பெருமிதம் கொண்டார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சூர்யா உலகத்திற்கே தாய்மொழி தமிழ் என்பதை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.
இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .