ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கிடுங்கள் . அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
அ இ அ தி மு க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
கட்சிக்காகவும் , தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளான 24.2.2025, திங்கட்கிழமை அன்று அம்மாவின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் ப. அம்மாவின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தங்களால் இயன்ற நலத்திட்டங்கள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், ப.குமார் கலந்து கொள்கிறார்.
24.2.2025, திங்கட்கிழமை
காலை 9.00 மணி:
திருச்சி திருவெறும்பூர், பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
காலை 9.30 மணி: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில்..
காலை 10.30 மணிக்கு: லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில்..
காலை 11.45 மணி முதல் : மணப்பாறை சட்டமன்ற தொகுதியிலும்.. பங்கேற்க உள்ளார்கள்
அதுசமயம் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .