இந்தியாவில் இலவச யுபிஐ பேமெண்ட் (Free UPI Payment) சகாப்தமானது நிச்சயமாக முடிவுக்கு வரும் என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு வேகமாக வரக்கூடாது.
அப்படி ஒரு வேலையைத்தான் – இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் பே (Google Pay) பார்த்துள்ளது.
கூகுள் பே ஆப் ஆனது தனது சேவையில், யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இனிமேல் கூகுள் பே ஆப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரண்டு நபர்களுக்கு இடையேயான யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை அல்லது ஒரு கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பேமெண்ட்கள் ஆனது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஆனால் கூகுள் பே ஆப் வழியாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமெண்ட்களை செய்தால் – கட்டணம் வசூலிக்கப்படும்.
கூகுள் பே அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்களின்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1% முதல் 5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாணரணத்திற்கு உங்களுடைய மின் கட்டணம் ரூ.1,000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் (அதாவது ரூ.10) கட்டணமாக வசூலிக்கப்படும்.
கூகுள் பே அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முற்றிலும் புதியவை அல்ல. பேடிஎம் (Paytm) மற்றும் போன்பே (PhonePe) போன்ற பிற யுபிஐ ஆப்களில் ஏற்கனவே இதுபோன்ற கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்விரு ஆப்களுமே பேங்க் கார்டுகள் மூலம் செய்யப்படும் பில் பேமெண்ட்டுகளுக்கு இதே போன்ற கட்டணங்களை வசூல் செய்கிறது.
சமீபத்தில் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
2025 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்? என்பிசிஐ அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் முழுக்க முழுக்க.. ஆட்டோ அக்செப்ட்ன்ஸ் (Auto acceptance) மற்றும் சார்ஜ்பேக்குகளை நிராகரிப்பது (Rejection of chargebacks) தொடர்பான விதிகள் ஆகும்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை கிரெடிட் உறுதிப்படுத்தல் (Transaction Credit Confirmation – TCC) மற்றும் ரிட்டர்ன் கோரிக்கைகள் (Return requests – RET) ஆகியவற்றின் அடிப்படையில் சார்ஜ்பேக் ஆனது தானாக ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
தகராறுகள், மோசடிகள் அல்லது தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக, பூர்த்தி செய்யப்பட்ட யுபிஐ பரிவர்த்தனையை திருப்பி செலுத்துதலே சார்ஜ்பேக் என்று அழைக்கப்படுகிறது. பணம் செலுத்துபவரின் வங்கி இதற்கான செயல்முறையை தொடங்கும், பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டால், பணம் செலுத்துபவர் பணத்தை திரும்பப் பெறுவார்.
முன்னதாக பணம் அனுப்பும் வங்கிகள் ஆனது சிக்கல் ஏற்பட்ட அதே நாளில் பணத்தை திருப்பி கொடுப்பதற்காகவும் கூட கட்டணம் வசூலிக்கும்படி இருந்தது. பயனாளிகளுக்கான வங்கிகள் ஆனது பரிவர்த்தனைகளை சீர்செய்ய நேரம் கிடைப்பதற்கு முன்பாகவே இது அடிக்கடி நிகழ்கிறது. இது நிராகரிக்கப்பட்ட ரிட்டர்ன் கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
சில சமயங்களில், ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) மூலம் அபராதம் விதிக்கப்படுவதன் காரணமாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்கள் தானாகவே மூடப்படும். இந்த சிக்கல்களைச் சரிசெய்ய, என்பிசிஐ ஆனது இந்த செயல்முறையை மாற்றியுள்ளது. இப்போது, அடுத்த செட்டில்மென்ட் சுழற்சியில் பயனாளி வங்கி எழுப்பிய டிசிசி / ஆர்இடி அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்படும்.