ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வருகை தர அனைவரும் திரண்டு வாரீர் . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை .
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு
திருச்சிக்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருமணங்களை நடத்தி வைக்க நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 7.30 மணி அளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எனவே அவரை வரவேற்க திருச்சிவிமான நிலையத்தில் மாநில,மாவட்ட,
மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,, பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ,கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.