திருச்சி எ.புதூரில் ஆண்கள் பெண்களுக்கான பிரம்மாண்ட போஷ் அழகு நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சியில் பிரம்மாண்ட போஷ் (POSH) அழகு நிலையம். அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி எடமலைப்பட்டி புத்தூரில் பிரம்மாண்ட போஷ் (POSH )அழகு நிலையம்) திறப்பு விழா அதன் நிறுவனர்
நசிகா ரிஸ்வான், தலைமையில் நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினரும், திருச்சி மாவட்ட துணை செயலாளருமான முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.
மேலும் திமுக தொண்டர்களும் பங்கேற்றனர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு .பீர்முகமது, பகுதி துணை செயலாளர் சந்திரமோகன் மற்றும் திருச்சி மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பைசல் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த அழகு நிலையத்தில் ஃபேஸ் வாஷ் ஹேர் கட்டிங் திருமண பெண் அலங்காரம், ஹேர் டை போன்ற அழகு கலையை சிறந்த வல்லுனர்களைக் கொண்டு அதி நவீன தொழில் நுட்பத்துடன் குறைந்த செலவில் ஆண் பெண் இருவாளருக்கும் அழகு படுத்துதல் செய்து வருகின்றனர்.