திருச்சியில்
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது.
திருச்சி இ.பி ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இபி ரோடு தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கஞ்சா விற்றதாக தெரிய வந்தது . கிழக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது18) மற்றும் இ.பி ரோடு உப்பிலிய தெரு பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது18 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது22) என்ற வாலிபரை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.