Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது.

 

திருச்சி கீழகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவர்

Suresh

பொன்மலை யானை பார்க் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர் ராஜ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து பொன்மலை பட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் ஜான் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த வினோத் ( வயது27) ஆகிய 2 பேரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர் .

 

இதேபோன்று திருச்சி செம்பட்டு, ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் 3 பேர் கைது .

 

திருச்சி செம்பட்டு புதுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது25).இவர் நேற்று ஏர்போர்ட் முல்லை நகர் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கலைவாணர் தெருவைச் சேர்ந்த பிரேம் (வயது28), காமராஜர்நகர் சங்கம் தெருவை சேர்ந்த மணிகண்டன் ( வயது22 ) ஆகிய 2 பேரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று

கீழகொண்டையாம் பேட்டை குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது48).இவர் நேற்று மேலூர் அய்யனார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில்ஸ்ரீரங்கம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பிரபு (வயது42 ) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.