திருச்சி மத்திய சிறை சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 89).இவர் கடந்த 2022 ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டு இருந்தார் .
இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் இருந்து உள்ளதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த 12 ந் தேதி காலை இவரை திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சிறைத்துறை அலுவலர்கள் சேர்த்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிறைதுறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.