திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மாண்புமிகு மாவட்ட நீதிபதி
எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் Bench and Bar meeting ( நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துகள் கேட்கும் நிகழ்வு) வருகின்ற திங்கட்கிழமை 17/2/2025 ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் புதிய நீதிமன்ற வளாகம் நான்காவது மாடியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம் அல்லது தலைவர் இடம் கூறினால் அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார். கட்டாயம் வழக்கறிஞர்கள் சீருடைகள் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பார் கவுன்சில் அடையாள அட்டையை கையில் வைத்துக் கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
மேலும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .