ஸ்ரீரங்கத்தில் நாளை அம்மா பேரவை சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் திண்ணை பிரச்சாரம் .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணைப் பிரச்சாரம்.
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வழிகாட்டுதலின்படி
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக நாளை 14.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில்
ஸ்ரீ ராகவேந்திரா வளைவில் இருந்து ஸ்ரீரங்கம் காந்தி சிலை வரை நமது அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல நல்லத்திட்டங்களை துண்டுப் பிரச்சாரமாக மக்களுக்கு விநியோகம் செய்ய
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைக்க
வருகை தர உள்ளார்.
அது சமயம் இந்த நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்படைய செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான
அய்யம்பாளையம் G.ரமேஷ் தெரிவித்துள்ளார்.