திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சி அருகே
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த
3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரிடம் அந்த பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். இதற்கான பத்திரப்பதிவு திருவரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் நிலம் விற்பனை செய்த 4 பேர் சேர்ந்து ஆறுமுகத்துக்கு விற்பனை செய்த நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகம் திருவரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.