Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை ஆசிரியர். இந்திய மாணவர் சங்கப் போராட்டம் .

0

'- Advertisement -

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர்.

திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது.

மேலும் பள்ளிக்கு வரக்கூடிய முட்டை, துவரம் பருப்பு உள்ளிட்ட சத்துணவு பொருட்கள் அனைத்தும் உணவங்களுக்கு விற்கும் தலைமை ஆசிரியர் அவர்களை கண்டித்தும்,

Suresh

மாணவர்களை அடித்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் மூவேந்தனை கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி கிளை தலைவர் சந்துரு தலைமையில் பள்ளி அருகே போராட்டம் நடைபெற்றது .

இந்த போராட்டத்தில் கண்டன உரையாக கிளையின் செயலாளர் ஜெர்ரி, இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன், எம். ஏ. எம் கல்லூரியின் கிளைச் செயலாளர் அருள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போராட்டக்காரர்கள் கோரிக்கையை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .

Leave A Reply

Your email address will not be published.