திருச்சி அரியமங்கலத்தில் பரிதாபம்:
ஆட்டோ டிரைவர்
தூக்குபோட்டு சாவு.குடும்ப தகராறில் விரக்தி

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.
இந்த தம்பதியருக்கு இடையே கடன் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது .
இந்த நிலையில் சம்பவத்தன்று பர்வீன் சுய உதவி குழு கடன் தவணைத் தொகை செலுத்துவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று உள்ளார்.பிறகு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினர். அப்போது முகமது பைசல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் இது குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.