திருச்சியில் வரும் 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல். மீறினால் உரிமம் ரத்து
திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 அன்று உலர்நாளாக (Dry Day) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 11ஆம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும்.
அதையும் மீறி, மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.