சேலத்தில் ஒரே பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்திருந்த மோதலில் டெம்போ டிரைவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்த வீராணம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 29), டெம்போ டிரைவர். கடந்த 6 ஆண்டுக்கு முன் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுடன் முறை தவறிய உறவில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்பெண்ணுக்கு வீராணம் துளசிமணியனூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவருடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவரும் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளார்.

இதனை அறிந்த குமரவேல், பிரகாசை கண்டித்துள்ளார். இதனால், கள்ளக்காதலி யாருக்கு என்பதில் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் குமரவேல், அப்பகுதியில் உள்ள துளசிமணியனூர் அய்யனாரப்பன்கோயில் அருகே மது குடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோர் வந்து, குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளனர். திடீரென குமரவேலை தாக்கி கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷ், மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேரையும் நள்ளிரவில் மடக்கி பிடித்து கைது செய்தனர்
. கைதான பிரகாஷ் மீது அடிதடி, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் உள்ளது. ரவுடி பட்டியலில் இருக்கும் பிரகாஷ் ஒருமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகியுள்ளார்.
ஒரே பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்துக்கொண்ட மோதலில் டெம்போ டிரைவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.