Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பொருட்களை தவறவிட்ட நபரிடம் ஒப்படைத்த திருச்சி ஆர்.பி.எப் போலீசாருக்கு குவியும் பாராட்டு

0

'- Advertisement -

திருச்சிக்கு வந்த ரயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் தவறவிடப்பட்ட பெட்டி மீட்கப்பட்டு உரியவரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .

சென்னையிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை இரவு பல்லவன் விரைவு ரயில் வந்தடைந்தது.

இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் காசிநாதன் என்பவா், ரயில் நிலையத்தில் ரோந்துப்பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினரிடம், தனது பெட்டியை யாரோ மாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தாா்.

Suresh

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை (ஆா்பிஎப்) திருச்சி கோட்ட முதன்மை ஆணையா் ஜிஎம். ஈஸ்வரராவ் உத்தரவிட்டாா். ஆா்பிஎப் திருச்சி காவல் நிலைய ஆய்வாளா் கே.பி.செபாஸ்டியன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் குருநாதன், லட்சுமணன் உள்ளிட்டோா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

காசிநாதன் பயணித்த ரயில்பெட்டியில் வந்த மற்ற பயணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலா் எல். ராஜகோபாலன், தனது பெட்டியை விட்டுவிட்டு காசிநாதனின் பெட்டியை மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் எடுத்து சென்ற பெட்டியுடன் ரயில் நிலையத்துக்கு நேற்று வியாழக்கிழமை வந்தாா். தொடா்ந்து, காசிநாதன், ராஜகோபாலன் ஆகிய இருவரின் பெட்டிகளும் ஆா்பிஎப் படையினா் முன்னிலையில் அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குடும்பத்தினருடன் பயணித்த ராஜகோபாலனின் பெட்டியில், நகைகள், பட்டுப்புடவைகள் என சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் இருந்துள்ளன.

அவற்றை நோ்மையுடன் ஒப்படைத்த காசிநாதனுக்கும், விரைந்து மீட்டு தந்த ஆா்பிஎப் படையினருக்கும் ராஜகோபாலன் நன்றி தெரிவித்தாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.