சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார். சாதாரண உடையில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆட்டோ வந்ததும் அதில் ஏறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் ஆப்பில் காட்டியதைவிட கூடுதலாக ரூ. 50 கேட்டு தகராறு செய்தாராம். அப்போது திடீரென சக்கரத்தை இயக்கியதால் இன்ஸ்பெக்டர் சுமதியின் காலில் காயம் ஏற்பட்டது.
சென்னை, கோவையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை புக்கிங் செய்தால், சில வாகன ஒட்டுநர்கள், ஆப்பில் காட்டுவதை கூட கூடுதலாக கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுவும் வாகனத்தில் ஏறிய உடன் கூடுதலாக 50 ரூபாய் கொடுங்கள் என்று கேட்பார்கள். சிலர் வாகனத்தை புக்கிங் செய்த உடனேயே 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் வருகிறேன் என்பார்கள்.
சிலர் இரவு நேரங்களில் ஆப்பில் காட்டுவதைவிட அதிகமாக கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதன் காரணமாக பயணிகள் வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில் சென்னையில் சாதாரண உடையில் இருந்து பெண் இன்ஸ்பெக்டருக்கு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அத்துடன் வாகனத்தை ஓட்டிய போது, இன்ஸ்பெக்டரின் காலில் ஏறி இறங்கி உள்ளது. அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை முகப்பேர் மேற்கு 6-வது பிரதான சாலையை சேர்ந்த சுமதி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாதாரண உடையில் கோயம்பேட்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக செல்போன்(ஆப்) செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 37), இன்ஸ்பெக்டர் என தெரியாமல் அவரிடம், செயலியில் காட்டும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.50 தரும்படி கேட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன், சுமதியை ஆட்டோவில் இருந்து இறங்குமாறு கூறினாராம்.
இதனால் சுமதி ஆட்டோவில் இருந்து இறங்கிய போது, உடனே மணிகண்டன் ஆட்டோவை வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது ஆட்டோ சக்கரம் சுமதியின் காலில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சுமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற கோயம்பேடு போலீசார், ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ சக்கரம் ஏறியதால் காலில் காயம் அடைந்த சுமதி, அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமதி சாதாரண உடையில் இருந்ததால் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் அவரிடம் கூடுதல் கட்டணம் கேட்டு டிரைவர் மணிகண்டன் தகராறு செய்த நிலையில்,
இப்போது போலீசிடம் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஓலா , ரேப்பிடோ இதுபோன்று ஆப்புகளில் புக் செய்யும் போது டிரைவர்கள் கூடுதல் கூடுதல் கட்டணம் கேட்டு பயணிகளிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது