வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத மன உளைச்சலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை.
சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (வயது 46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் தான் வசித்து வந்த பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கடன் வாங்கி இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி வீடு கட்டியுள்ளார். இவருடைய மனைவியும் தனியாக கடன் வாங்கியுள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளிட்டறை வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனால் அவர்களுக்கு போதிய அளவு வருமானம் வராததால் அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததோடு அபராத தொகையுடன் சேர்த்து கடனும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதோடு வங்கியில் இருப்பவர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து கடனை திருப்பி செலுத்துமாறு சத்தம் போட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று கடனை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கெடு விதித்து கூறி இருந்தனர்.
இதனால் செய்வதறியாத திகைத்த கணவன் மனைவி இருவரும் பலரிடமும் கடனை அடைக்க பண உதவி கேட்ட நிலையில் யாரும் தந்து உதவாத மன உளைச்சலில் தங்கள் மகளுடன் தற்கொலை முடிவு.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தான் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவத்திற்கு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அதில் பல்வேறு தகவல்களை அவர்கள் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் உள்ள விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.