திருச்சி மணச்சநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் சிவபதி பங்கேற்பு.
அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அணி சார்பில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் நால்ரோடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாணவரணி மாவட்ட செயலாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.அறிவழகன் தலைமை வகித்தார். முன்னதாக நகர கழக செயலாளர் எஸ்.சம்பத்குமார், மாணவ அணி மாவட்ட துணை செயலாளர் பி.ஆர்.சிதம்பரம் வினோத் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, தலைமை கழக பேச்சாளர் சுறுசுறுப்பு சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.பி.பூனாட்சி, ப.அண்ணாவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.பரமேஸ்வரி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு(எ)பே.சுப்பிரமணியன், மாவட்ட கழக துணை செயலாளர் கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சமயபுரம் டி.இராமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை தலைவர் எம்.வி.கவியரசு, துணை செயலாளர் அ.திருநாவுக்கரசு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெ.அறிவழகன் விஜய், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஜி.ரமேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.நாகராஜ், மாணவர் அணி மாவட்ட தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம்.ஆர்.வி.பாஸ்கர், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மணப்பாறை எம்.செல்வராஜ், டி.ஜெயக்குமார், வி.ஆதாலி, எஸ்.ஜெயராமன், கோப்பு அ.நடராஜ், துறையூர் நகர கழக செயலாளர் அ.அமைதிபாலு, பேரூர் கழக செயலாளர் துரை சக்திவேல், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.சந்திரமோகன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், எட்டரை த.அன்பரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆமூர் எம்.சுரேஷ்ராஜா, ஒன்றிய கழக துணை செயலாளர் அயம்பாளையம் டி.கந்தசாமி, வட்டக் கழக செயலாளர் தமிழரசன், மற்றும் கழக நிர்வாகிகள் புரட்சித்தலைவி அம்மா பேரவை பேரூர் கழக தலைவர் நடராஜமூர்த்தி, பெரமங்கலம் வ.தெ.கருப்பையா, பி.பாலு, முடிவில் கண்ணனூர் பேரூர் கழக அவைத்தலைவர் எம்.கே.ராஜேந்திரன், துணை செயலாளர் வி.செல்வி வெங்கடேசன், ஆகியோர் நன்றி கூறினர்.