Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி.

0

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு
எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான
விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு அதன் மாநில தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார்.

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இதனை தடுத்து நிறுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று கனிம வளங்கள் அதிக அளவில் தமிழகத்தில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனை அள்ளும் பணி மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தனியாருக்கு அளிக்கப்படுவதால் மாபியா கும்பல் கட்டு கட்டுப்பாட்டில் செல்கிறது. இதனால் அரசு நிர்ணயிக்கும் விலையை விட பத்து மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் மணல் கொள்ளை கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றவாளிகள் மீது கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.