திருச்சியில் வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது.
திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ சிந்தாமணி, பதுவை நகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் துமுகோ குமாரிடமிருந்து செல்போனை மீட்டு மீண்டும் கிஷோரிடம் ஒப்படைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த துமுகோ குமார், மனோஜை சிந்தாமணி புத்தக நிலையம் அருகே வைத்து கத்தியால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த மனோஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மனோஜின் தாயார் ஜான்சி ராணி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து துமுகோ குமாரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.