திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை – முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி.
இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியதாவது:-
நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் உள்பட என்னுடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பலமுறை கட்சியின் வளர்ச்சிகளை குறித்து நிர்வாகிகள் கோரிக்கை வைத்தும் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டார். ஆகையால் அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் தானாக விலகினர். அதேசமயம் வலுக்கட்டாயமாக சிலரை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு வரும் காலங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து செயல்பட உள்ளோம் என முடிவு எடுத்து நான்கு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து உள்ளோம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பேசி வருகிறார். குறிப்பாக பெரியார் பற்றி பேசியதாக இருக்கட்டும், இதுபோல பல கருத்துகளுக்கு சம்பந்தமில்லாமல் தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார். இது கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் யாருக்கும் பிடிக்கவில்லை
சீமான் அவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்,அது விரைவில் மக்களுக்கு வெளிப்படையாக தெரிய வரும். தமிழ்நாட்டில் வருங்காலங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்பான வளர்ச்சிப் பணிகளுக்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என தெரிவித்தார்.
பேடியின் போது நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து வந்த நிர்வாகிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .