திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை, கார தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் தஞ்சாவூர் கிழக்கு பகுதியில் செய்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2024ம்ஆண்டு நவ.8ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜன. 21ம் தேதி ஹரிஹரன் திருச்சி மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூர் கோர்ட் கூடுதல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வந்தபோது அவரிடம் 7 கிராம் கஞ்சா இருப்பதை திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முக சுந்தரம் கண்டுபிடித்து அதை மணிகண்டனிடமிருந்து பறிமுதல் செய்துள்ளார்.
இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முக சுந்தரம் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தஞ்சை சென்றபோது யார் அவருக்கு கஞ்சா வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.