திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின் புகார் அளித்த மாநகராட்சி உதவி ஆணையர் .
சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர்.
திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபரை உறையூர் போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் சீனு கிருஷ்ணன். இவர் கடந்த ஜன.6 ந்தேதி உறையூர் கோணக்கரை மயானம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோணக்கரை கால்நடைகள் கூடாரத்தில் அடைத்துள்ளார்.
இந்நிலையில் அன்றே அந்த கூடாரத்தினுள் நுழைந்த மர்ம நபர் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் 10 சிசிடிவி கேமராக்களையும் உடைத்துவிட்டு, அங்கு அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
(ஏற்கனவே மர்ம நபரின் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் சிக்கி கோணக்கரையில் அடைக்கப்பட்டு அபராதம் செலுத்தி திருப்பி இருப்பார். ஏற்கனவே வந்த நபர் என்பதால் சிசிடிவி கேமரா எங்கு உள்ளது என்பதை நன்கு அறிந்து அதனை உடைத்து மாடுகளை திருப்பி சென்று உள்ளார் .)
இது குறித்து உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன் 15 நாட்கள் சென்ற பின் நேற்று செவ்வாய் கிழமை ( ஜன.21ந்தேதி) அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.