Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

0

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்து உள்ளது.

இங்கு 430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை, இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கழிவறை இல்லை, கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லை, சுத்தமான குடிநீர் இல்லை என 50க்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய மக்களுடன் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை இருப்பதாக உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டதின் முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது.இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

Leave A Reply

Your email address will not be published.