எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திருச்சி பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு
2026 -ல் அதிமுக ஆட்சி அமையும்:
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
திருச்சி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு
திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில்
சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜவஹர் அலி,
மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்,
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசுகையில்,‘‘2021ல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஓட்டளித்த மக்களுக்கு அனைத்து வரிகளையும் உயர்த்தி வாட்டி வதைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். 2026ல் அதிமுக ஆட்சி அமைப்பதையும், எடப்பாடியார் முதல்வராவதையும் யாராலும் தடுக்க முடியாது’’, என்றார்.
கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜோதிவாணன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, மாவட்ட அணி செயலாளர்கள் இலக்கிய அணி பாலாஜி ,கலிலுல் ரகுமான் அப்பாஸ் இலியாஸ், வெங்கட் பிரபு, பகுதிச் செயலாளர்கள் ரோஜர், என்.எஸ். பூபதி,எம்.ஆர்.ஆர் முஸ்தபா,சுரேஷ் குப்தா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி,கலைவாணன், நாகநாதர் பாண்டி ,புத்தூர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பாலக்கரை சதர்,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்து மாரி, சசிகுமார், கௌசல்யா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், கருமண்டபம் சுரேந்தர், டிபன் கடை கார்த்திகேயன்
வட்டச் செயலாளர்கள் சையது ரபி, டைமன் தாமோதரன், வைத்திலிங்கம், நத்தர்ஷா ,கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி, எடத்தெரு பாபு,ஜெயக்குமார், வசந்தம் செல்வமணி,
நிர்வாகிகள் அப்பா குட்டி, பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அக்பர் அலி ,மார்க்கெட் பிரகாஷ், தில்லை விசுவா,கல்லுக்குழி முருகன், ரமணிலால், கோழிக்கடை பாலு, பூக்கடை முத்துக்குமார்,செல்லப்பா, கிராப்பட்டி கமலஹாசன் ,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,
ரஜினிகாந்த், உடையான்பட்டி செல்வம்,தென்னூர் ஷாஜகான், கே.பி. ராமநாதன்
மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் பாலக்கரை பகுதி மாணவரணி செயலாளர் மார்க்கெட் பிரகாஷ் நன்றி கூறினார்.