வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
என்கிற வள்ளலாரின் வரிகளை கண் முன் நிறுத்தும் வகையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
இரு தினங்களுக்கு முன் சென்னையில் வெளியான நாளிதழில் பாக்ஸ் செய்தியில்..
நமது திருச்சி அரசு பொது மருத்துவமனை வாசலில்,
கஸ்தூரி என்னும் 66 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண் , சோப்பு சீப்பு குழந்தைகளுக்கான கண் மை, துண்டு, கர்ச்சீப் போன்ற பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் 3.மாதங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியும், அப்போது கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் களவு போனதாகவும், மேலும் இப்போது அதே இடத்தில் சிறிய அளவில் அதே கடை நடத்தி வந்தாலும் விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட போதுமான பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக வெளியான செய்தியினை படித்த
அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள், சம்பந்தபட்ட மூதாட்டியின் தரைக்கடைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை விசாரித்து, தொடர்ந்து கடையினை நடத்துவதற்கு உதவிடும் வகையில் சிறு தொகையையும் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்த தருணத்தில் அந்த மூதாட்டி மட்டுமல்லாமல் அங்கு நின்ற பொதுமக்களும், சிகிச்சைக்கு வந்தவர்களும் ஆளும் திமுகவினர் செய்யாததை அதிமுக மாவட்ட செயலாளர் செய்ததை கண்டு குமாரை பாராட்டி வாழ்த்தி சென்றனர் .
இந்த நிகழ்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சிங்காரவேலுராஜா, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தை எல்.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.