வரும் வெள்ளிக்கிழமை எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் . திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108-வது ஆண்டு பிறந்த நாளான நாளை 17.01.2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10:01 மணியளவில்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது .
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,பகுதி, வட்ட கழக அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .