எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாக்குறித்து அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை .
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா.
டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17.01.2025 (வெள்ளி) அன்று,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும்,

டாக்டர் புரட்சித் தலைவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.
1. திருவெறும்பூர்: பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம். (காலை 8 மணி)
2. திருச்சி கிழக்கு : காந்தி மார்க்கெட் மரக்கடை. (காலை 8:30 மணி)
3. திருச்சி மேற்கு: கோர்ட் அருகே.(காலை 9:00 மணி)
4. மணப்பாறை: வையம்பட்டி பேருந்து நிறுத்தம். (காலை 10:30 மணி)
இந்நிகழ்வுகளில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி , நகரம், ஒன்றியம், பேரூராட்சி, வார்டு, ஊராட்சி, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .