Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எஸ் பி அலுவலக 24 மணிநேரமும் செயல்படும் புதிய காவல் உதவி எண் இது தான்

0

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது:-
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டம் ஒழுங்கு தொடா்பான பிரச்னைகள், பாலியல் தொடா்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறுகள், பொது அமைதிக்கு எதிராக பங்கம் விளைவிக்கும் வகையான செயல்பாடுகள், சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை, 89391 – 46100 என்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக காவல் உதவி எண்ணில் அழைப்பு மூலமாகவும் கட்செவி அஞ்சல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போா் குறித்த விவரம் காக்கப்படும்.

இதுதொடா்பாக நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வநாகரத்தினம், காவல் உதவி எண்ணை அறிவித்து, தொடா்புடைய கைப்பேசியை காவல்துறையினருக்கு வழங்கினாா்.

இதற்கு முன்பு, காவல் கண்காணிப்பாளராக வீ. வருண்குமாா் இருந்தபோது, அறிவிக்கப்பட்டிருந்த காவல் உதவி எண்ணுக்குப் பதிலாக இந்தப் புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.